Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோட்டம் மாற்றியதால் தமிழக ரயில்களின் எண்கள் மாற்றம்

கோட்டம் மாற்றியதால் தமிழக ரயில்களின் எண்கள் மாற்றம்

8 ஜோடி ரயில்களின் வண்டி எண்கள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்டத்துக்கும், தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்துக்கும் இடையிலான நிர்வாக எல்லை, மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கீழ் இருந்த கர்நாடகாவின் மங்களூரூ பகுதி அக்.1 முதல் தென்மேற்கு ரயில்வேயின் மைசூரூ கோட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.

அதனால் பாலக்காடு கோட்டத்தின் கீழ் இயங்கி வந்த ரயில்கள் மைசூரூ கோட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. அதில் 8 ஜோடி ரயில்களின் வண்டி எண்கள் ஜன.1ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன. இப்படி வண்டி எண்கள் மாற்றப்படும் 8 ஜோடி ரயில்களில் 3 ரயில்கள் தமிழகம் வந்து செல்லும் ரயில்களாகும்.

மங்களூரு சென்ட்ரல்-கன்னியாகுமரி-மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் வண்டி எண்கள் 16649/16650 ஜன.1 முதல் 16249/16250 என்று மாற்றப்படுகிறது.

மங்களூரு சென்ட்ரல்-ராமேஸ்வரம்-மங்களூரு சென்ட்ரல் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் வண்டி எண்கள் 16621/16622, ஜன.2 முதல் 16241/16242 என மாறுகிறது.

மங்களூரு சென்ட்ரல்-கோவை சந்திப்பு-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலின் வண்டி எண்கள் 16323/16324, ஜன.1 முதல் 16243/16244 என்று மாற்றப்படும்.

மாறும் மும்பை ரயில்:

மத்திய ரயில்வேக்கு மாற்றப்பட்டுள்ள சென்னை எழும்பூர்-மும்பை சிஎஸ்எம்டி-சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் எண்கள் 22157/22158 ஜன.1 முதல் 11063/11064 ஆக மாற உள்ளது.

முந்தைய செய்தி
Over 6,000 candidates to take Group II exams
அடுத்த செய்தி
Tree-Planting Initiative Launched in Coimbatore

தொடர்புடைய செய்திகள்